இராணுவத்தினரின் புத்தாண்டு நிகழ்வுகள்

இலங்கை இராணுவ தலைமையகத்தில் வருடாந்தம் இடம்பெறும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் இம்முறை பனாகொடை இராணுவ முகாமில் அமைந்துள்ள இராணுவ பொறியியலாளர் படையணி தலைமையக விளையாட்டுமைதானத்தில் நேற்று(10) கோலாகாலமாக இடம்பெற்றது.

2019 ஆம் ஆண்டிற்கான ‘பக்மாஉலெல்ல’ சிங்கள – தமிழ் புத்தாண்டு நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் அவரது பாரியாரான இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராணுவ தளபதியினால் தேசிய கொடியேற்றி ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த புத்தாண்டு நிகழ்வில் கேலிக்கை விளையாட்டுக்களான ரபன் அடித்தல், தலையணைஉறை அடித்தல், அழகு ராணிகள் தேர்ந்தெடுத்தல், யானைக்கு கண் வைத்தல், பனிஸ் உண்ணுதல், மெதுவான சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டங்கள், வினோத உடை, தடை தாண்டுதல் போன்ற போட்டிகளில் இராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியநபர்களுக்கு இராணுவ தளபதி மற்றும் இராணுவ உயரதிகாரிகளினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தில் உள்ளசிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவா வனிதா பிரிவின் மூத்த அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

Thu, 04/11/2019 - 15:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை