டைனோசர்கள் அழிந்ததற்கு ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

பூமியின் மீது 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மோதிய சிறுகோளின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், அமெரிக்கப் பாறைகளில் அதன் தடயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தச் சிறுகோளின் தாக்கத்தால் டைனோசோர்கள் முற்றிலும் மடிந்ததாக நம்பப்படுகிறது. சிறுகோள் தாக்கியபோது சிதைந்த பாறைத் துகள்கள் உயிரினத் தொல்பொருள் படிமங்களில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

வடக்கு டக்கோட்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் அது தெரியவந்தது.

அந்தச் சிறுகோள் பூமியின் மீது மோதிய 2 மணி நேரத்துக்குள் விலங்குகளும் தாவரங்களும் மாண்டிருக்கலாம் என்று அண்மைய ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த விபரங்கள் பி.என்.ஏ.எஸ் என்னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை