குழந்தை வீடியோ பார்ப்பதை தடுக்க டபிள்யூ.எச்.ஓ அறிவுரை

ஐந்து வயதுக்குக் குறைவான பிள்ளைகளின், குழந்தைப் பருவ நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) குறிப்பிட்டுள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களும் தூக்கமும் அத்தியாவசியம். சிறு வயதிலிருந்தே அதைக் கடைப்பிடித்தால் பிற்காலத்தில் உடற்பருமனையும் நோய்களையும் தவிர்க்கலாம்.

அதற்குப் பிள்ளைகள் தொலைக்காட்சி, வீடியோ போன்ற ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து நேரத்தைக் கழிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும் என அந்த அமைப்பு கூறுகிறது.

ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் தொலைக்காட்சி, வீடியோக்களை அறவே காணக்கூடாது, ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் தரையில் அதிகம் விளையாடவேண்டும், இரண்டு வயதுக்கும் 4 வயதுக்கும் இடையில் இருக்கும் பிள்ளைகள் 1 மணி நேரத்திற்கு மேல் அதிக அசைவில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது, ஒரு வயதுக்கும் நான்கு வயதுக்கும் இடையில் இருக்கும் பிள்ளைகள் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிப்பாட்டியுள்ளது.

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை