வட கொரியாவுக்கு சர்வதேச உத்தரவாதம் கேட்கும் புடின்

அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வட கொரிய தலைவர் கிம் ​ெஜாங் உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுகிறது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கிம் ​ெஜாங் உன்னுடன் நிகழ்ந்த முதல் உச்சிமாநாட்டில் புடின் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான அமெரிக்க அணுகுமுறையை விமர்சித்துள்ள புடின், “அச்சுறுத்தல்களுக்கு பதிலாக நம்பிக்கையும் மரியாதையையுமே தேவைப்படுகிறது” என புடின் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற உச்சிமாநாட்டை மிகவும் அர்த்தமுள்ளதொரு சந்திப்பு கிம் ஜொங் உன் பாராட்டியுள்ளார்.

இதனிடை இந்த ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பில் அமெரக்கா அவநம்பிக்கையுடன் செயற்பட்டதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தின் அமைதி முற்றுமுழுதாக அமெரிக்காவிலேயே தங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

புடினுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிம், ஒரு தகுந்த நேரத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாக குறிப்பிட்டார். கொரிய தீபகற்பம் மற்றும் பிராந்தியத்தின் நிலை ஸ்தம்பித்திருப்பதாகவும் சிக்கலான புள்ளியை எட்டி இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

அண்மைய பேச்சுவார்த்தைகளை அடுத்து அவநம்பிக்கையில் அமரிக்கா தன்னிச்சையான செய்பாடுகளில் அதன் உண்மையான தன்மைக்கு திரும்பும் சூழல் உள்ளது என்று வட கொரிய தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரியில் வட கொரியத் தலைவர் கிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இடையே வியட்நாமில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு இன்றி முடிவடைந்ததை அடுத்தே இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்தது.

இதில் தன்னிடம் உள்ள அணு ஆயுதத்தை களைவதற்கு தனது நாட்டின் மீது விதிக்கப்பட்்டுள்ள பொருளாதாரத் தடைகளை அகற்றக் கோரியதை அடுத்தே அந்த பேச்சுவார்த்தை முறிந்ததாக நம்பப்படுகிறது.

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை