பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (09) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்; பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படும் அதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100மில்லிமீற்றர்   மழை வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய  சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில்; குறித்த இடங்களில் பலத்த காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை,  மஹாவெவ, அலலுவ, கடஹபொல, உஹுமிய, உடகம,  கந்தநுவர,  கிராந்துருகோட்டை, கல்மெத மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக இன்று நண்பகல் 12.11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

Wed, 04/10/2019 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை