பிரெக்சிட்டை தாமதிப்பதற்கு பிரிட்டன் எம்.பிக்கள் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரிட்டன் அரசாங்கம் அவகாசம் கோரும் சட்டமூலத்திற்கு, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அது வெற்றிபெற்றது. முன்னதாக, இம்மாதம் 12ஆம் திகதி பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து விலகுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அதனைத் ஒத்திவைக்க ஒன்றியத்திடம் கோரிக்கை விடுக்கப் பிரதமர் தெரேசா மேக்கு ஆதரவு கிட்டியுள்ளது.

வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கும் மேலவையின் ஒப்புதல் இல்லாவிட்டாலும், அரசாங்கம் ஒன்றியத்திடம் அவ்வாறு கோரும் என்று பிரிட்டன் நிதியமைச்சர் பிலிப் ஹெமண்ட் குறிப்பிட்டார்.

பிரெக்சிட் உடன்படிக்கைக்கு ஒப்புதல் கிடைத்த பின்னர், கூடிய விரைவில் பிரிட்டன் வெளியேற அது வாய்ப்பளிக்கும் என்றார் அவர்.

ஒப்பந்தம் ஏதுமின்று ஐரோப்பிய ஒன்றித்தியல் இருந்து விலகுவது பிரிட்டனுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்புகள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். “நாடு தீர்வொன்றை நாடியுள்ளது, தீர்வொன்று அவசியமானதாகும் அதனை பெறவே நான் செயற்படுகிறேன்” என்று எம்.பிக்களிடம் மே குறிப்பிட்டார்.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை