கட்டார் விமானங்களுக்கு சிரிய வான் பகுதி திறப்பு

கட்டார் ஏர்வேய்ஸ் விமான சேவை விமானங்கள் பறப்பதற்கு சிரியா தனது வான்பகுதியை திறந்துவிட்டுள்ளது. சிரியாவில் எட்டு ஆண்டுகளாக நீடிக்கு யுத்தத்தால் இந்த விமானசேவை தனது விமானங்களை மாற்று வழியாக விரிகுடா பகுதியால் செலுத்திவந்தது.

“கட்டார் சிவில் போக்குவரத்து அதிகாரசபையின் கோரிக்கைக்கு அமைய சிரிய வான் பகுதியில் கட்டார் ஏர்வைஸுக்கு அனுமதிக்க போக்குவரத்து அமைச்சர் அலி ஹம்மெளத் இணங்கினார்” என்று அந்த அமைச்சு கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு யுத்தம் வெடித்ததை அடுத்து பெரும்பாலான விமான சேவைகள் சிரியாவுக்கு மேலால் பறப்பதை நிறுத்திக் கொண்டு, யுத்த வலயத்தைத் தவிர்த்து நீண்ட பாதையால் பயணிக்க ஆரம்பித்தன. எனினும் சிரிய அரசு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னேற்றம் கண்ட நிலையில் அந்நாட்டில் மோதல் அண்மைய ஆண்டுகளில் பெருமளவு தணிந்துள்ளது.

சிறிய வளைகுடா நாடான கட்டார் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து சிரிய அரசுடனான உறவை துண்டித்தது. எனினும் சிரிய அரசு தற்போது நாட்டின் 60 வீதமான பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

தனது வளைகுடா அண்டை நாடுகளுடன் மோசமான உறவை கொண்டிருக்கும் கட்டார், சிரிய தலைநகரில் மீண்டும் தனது தூதரகத்தை திறக்கும் சாத்தியத்தை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை