2ஆம் உலகப் போர் கப்பல் சிதைவுகள் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட அவுஸ்திரேலிய கப்பல் ஒன்றின் சிதைவுகள் 77 ஆண்டுகளின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் 1942 இல் எஸ்.எஸ். அயர்ன் கிரவுன் கடற்படை கப்பல் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானதில் 38 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஐவர் உயிர் தப்பினர்.

பேஸ் நீரினையில் தாக்குதலுக்கு இலக்காகி 60 வினாடிகளில் அந்தக் கப்பல் மூழ்கியது.

இந்தக் கண்டுபிடிப்பு தேசிய முக்கியத்தும் வாய்ந்தது என்று கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய தேசிய கடல்சார் அருங்காட்சியக தேடுதல் குழு ஒன்று விக்டோரியா கடற்கரைக்கு அப்பால் 100 கிலோமீற்றர் தொலைவில் இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 100 மீற்றர் நீண்ட கப்பல் கடல் மேற்பரப்பில் இருந்து சுமார் 700 மீற்றர் ஆழத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கப்பலின் நங்கூரமும் அருகில் இருந்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து நியூ சவுத் வேல்ஸுக்கு தாதுப் பொருட்களை ஏற்றிச் செல்லும்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது.

உயிர்தப்பிய ஐவரும் மற்றொரு கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டனர். உயிர்தப்பிய மிக வயதான உறுப்பினர் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

Wed, 04/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை