சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

நாட்டின் சில இடங்களில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். 

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக,  அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று (30) தெரிவித்தது.

சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கப்படும் போதிலும், தகவல்களை பரிமாறிக்கொள்ளும்போது மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும் ​பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் 8 இடங்களில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், வைபர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சுமார் ஒரு வாரகாலமாக முடக்கப்பட்டிருந்தன. 

 

Tue, 04/30/2019 - 11:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை