அரசியல் அனுபவமில்லாத பெண் ஜனாதிபதியாக தேர்வு

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

முன்னதாக, இந்த தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் என்று அவர் கூறியிருந்தார்.

சட்டவிரோதமாக நிலத்தில் குப்பைகளை குவித்தது தொடர்பாக ஸ்லோவேக்கியாவில் 14 ஆண்டுகள் நடந்த வழக்கொன்றை முன்னின்று எடுத்து சென்ற ஜுசானா, அதில் பெற்ற வெற்றியின் மூலம் நாடு முழுவதும் சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டார்.

ஸ்லோவேக்கியாவின் பாராளுமன்றத்தில் ஓர் உறுப்பினரை கூட கொண்டிராத தாராளவாத முற்போக்கு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள 45 வயதான ஜுசானா விவகாரத்து ஆனவர். அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார்.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை