ஜப்பான் புதிய யுகம் அறிவிப்பு

ஜப்பானில் புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்துக்கான பெயர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரெய்வா’ என்று புது யுகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு ஜப்பானிய எழுத்துகளைக் கொண்டு அமைந்திருக்கும் அந்தப் பெயர் ‘ஒழுங்கு’, “மங்களகரம்’, ‘அமைதி’, ‘நல்லிணக்கம்’ ஆகியவற்றைக் குறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரரசர் அக்கிட்டோ, இம்மாத இறுதியில் அரியணை துறப்பதை அடுத்து, புதிய யுகத்திற்கான பெயர் அறிவிக்கப்பட்டது. 7ஆம் நூற்றாண்டிலிருந்து இதுவரை ஜப்பானில் சுமார் 250 யுகங்கள் நடப்பில் இருந்துள்ளன.

இம்மாத இறுதியில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ‘ஹெய்சி’ யுகம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ‘ரெய்வா’ யுகம் அதிகாரபூர்வமாகத் ஆரம்பிக்கப்படும்.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை