உக்ரைன் ஜனாதிபதி தேர்தலில் நகைச்சுவை நடிகர் முன்னிலை

அரசியலில் எந்த அனுபவமும் இல்லாத நகைச்சுவை நடிகர் ஒருவர் உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் 30.4 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

இத்தேர்தலில் ஜனாதிபதி பீட்டர் போரோஷென்கோ 17.8 வீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் யூலியா டைமோஷென்கோ இத்தேர்லில் போட்டியிட்டு மிகவும் குறைவாக 14.2 சதவீத வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி இழந்துள்ளார். இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

திரைப்பட நகைச்சுவை நடிகரான 41 வயது வொலாடிமிர் ஸெலான்ஸ்கி இந்த தேர்தலில் முன்னிலை பெறுவதற்கு அவரது நையாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சர்வன்ட் ஒப் பீப்பிள்’ ஒரு முக்கியக் காரணம் என கருதப்படுகிறது.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை