நடுக்கடலில் தத்தளித்த நாய் மீட்பு

தாய்லாந்து கடற்கரையில் இருந்து 220 கிலோமீற்றருக்கு அப்பால் பெற்றோலிய கிணறு ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களால் நாய் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இரும்புக் குழாய்களுக்கு நடுவே தத்தளித்துக் கொண்டிருந்த அந்த நாயை ஊழியர்கள் கயிற்றைக் கொண்டு மேலே எடுத்துள்ளனர்.

முற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த அந்த நாய் கடலுக்கு நடுவில் எவ்வாறு நிர்க்கதியானது என்று தெரியவில்லை. தரைக்கு தொலைதூரத்தில் இருக்கும் அந்த பெற்றோலிய கிணறில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நாயை மீட்டு உணவு வழங்கி பாதுகாத்துள்ளனர்.

அந்த நாய் மீன்பிடிப் படகு ஒன்றில் இருந்து கடலில் விழுந்திருக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். அந்த நாய் நேற்று கரைக்குக் கொண்டுவரப்பட்டது.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை