விளம்பரமில்லாமல் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றோம்

விளம்பரமில்லாமல் அரசியல் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.இரண்டு மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட துறைநீலாவணை வடக்கு உள்ளூர் வீதியினை, பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,அபிவிருத்தியும் அரசியலும் இரு கண்களாக சமாந்தரமாக பயணிக்க வேண்டும் என்பதே மக்களினதும் கூட்டமைப்பினதும் நோக்கமாகவுள்ளது.

முறையான கொள்கைத் திட்ட வியூகங்களை வகுத்து அதற்கேற்பவே விளம்பரமின்றிய அரசியல் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம். கூட்டமைப்பின் அபிவிருத்தி பணிகளை தமிழ் மக்கள் கண்காணிப்பதுடன் மனச்சாட்சிக்கும் கடவுளுக்கும் பயந்து அபிவிருத்தி வேலைகளை ஒவ்வொருவரும் முன்னெடுப்பவராக இருப்போமாயின் எவருக்கும் அஞ்ச வேண்டிய தேவையில்லை.

மனித உரிமை மீறல்களுக்கான விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தை தோற்கடித்து தமிழ் மக்களின் அரசியலுரிமை தேவைகளை கருத்திற்கொண்டு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே மைத்திரி ஆட்சியை கொண்டு வந்தோம். இவ் ஆட்சியில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகள் ஊழல், வரியின்றி இடம்பெறுவதால் தரமான அபிவிருத்திகளை முன்னெடுக்கக் கூடியதாகவுள்ளது.

ஊழல் மோசடி, கையூட்டு, மக்களின் பணத்தை சொந்த சுயநலன்களுக்காக பயன்படுத்துகின்றவர்கள் இவ் ஆட்சியில் இல்லாததனால் நிறைவான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடிவதுடன் அரசியல், நிர்வாகம் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளிலுள்ளவர்கள் முறையாக செயற்படும் போது ஆரோக்கியமான நாட்டை உருவாக்க முடியும் என்றார்.

மண்டூர் குறூப் நிருபர்

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை