ஆதில் பாக்கீர் மார்க்கார் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டம்; பேருவளை சுப்பர் சன் சம்பியன்

களுத்துறை மாவட்டமுஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்காக நடாத்திய அணிக்கு 7 (ஏழு) பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் பேருவளை சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவாகின.

பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை மைதானத்தில் (31) மாலை நடைபெற்ற இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 24 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.

இறுதிப் போட்டி பேருவளை சுப்பர் சன் உதைபந்தாட்டக் கழகத்திற்கும் களுத்துறை எயர் லங்கா உதைப்பந்தாட்டக் கழகத்திற்குமிடையே நடைபெற்றது. போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் மிகத் திறமையாக விளையாடிய போதிலும் கோல் பெற்றுக்கொள்ளவில்லை. போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற நிலையில் பெனால்டி முறை வழங்கப்பட்டது. இதன்போதே எயார் லங்கா அணி 2 கோல்களைப் பெற்றதோடு சுப்பர்சன் அணி 3 கோல்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இப் போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக சுப்பர்சன் அணியைச் சேர்ந்த எம்.என்.எம். பாதில் தெரிவுசெய்யப்பட்டதோடு சிறந்த கோல் கப்பாளராக எயர்லங்கா அணியைச் சேர்ந்த முஹம்மதும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டிக்கு பீ.எம். அஸாத் நடுவராக கடமையாற்றுயதுடன் உதவி நடுவர்களாக எம். முஸம்மில், எம். சிபாஸ்தீன் ஆகியோரும் கடமை புரிந்தனர்.

களுத்துறை மாவட்ட உதைபந்தாட்ட லீக், பேருவளை உதைபந்தாட்ட லீக் ஆகியவற்றின் தலைவராக அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன அங்கீகரிக்க்பபட்ட உதைபந்தாட்ட பயிற்சியாளராக மற்றும் மத்தியஸ்தராக பதவி வகித்து உதைபந்தாட்டத் துறையின் வளர்ச்சிக்காக 45 வருட காலம் பணி செய்த பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம். பதியுத்தீன் நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பரிசளிப்பு விழா முன்னணியின் மாவட்ட தலைவர் இக்பால் சம்சூதீன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ​ெஜமீல், பேருவளை நகர பிதா மஸாஹிம் முஹம்மத், முன்னாள் எம்.பி. அஸ்லம் ஹாஜியார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். யூஸும், எம்.எம். அம்ஜாத், முன்னாள் களுத்துறை நகர பிதா எம்.எம். ஜௌபர், பேருவளை நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹஸன் பாஸி, கோல்டன் கேட் பாடசாலை பணிப்பாளர் ஹஸீன் ஹஸன், பேருவளை உதைபந்தாட்ட சங்க தலைவர் எம்.எஸ்.எம். பஸ்லான் செயலாளர் எம்.ஆர்.எம். சினான் உட்பட பேருவளை நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னணியின் உறுப்பினர்கள், பிரமுகங்கள் பங்குபற்றினர்.

பேருவளை விசேட நிருபர்

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை