மைலோ கிண்ணத்திற்கான உதைபந்தாட்டம்: பதுளை அல்-அதான் அணி சம்பியன்

மைலோ கிண்ணத்திற்கான' பதுளை மாவட்ட 12 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டித் தொடரில் பதுளை அல்-அதான்' அணி சம்பியனாகி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இப் போட்டியில் இரண்டாமிடத்தை குருத்தலாவை 'அல்-இல்மா' அணியும், மூன்றாமிடத்தை பதுளை அல்-−ஹிக்மா அணியும் பெற்றுக்கொண்டன.

உடற்கல்விப் பொறுப்பாசிரியர் மன்சூர் பளீலின் பயிற்சியிலும் வழிகாட்டலிலும் வெற்றியீட்டிய பதுளை அல் - அதான் அணி 2012ல் முதல் முறையாக தேசிய மைலோ வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

28 பாடசாலை அணிகள் பங்குபற்றிய இப்போட்டி பதுளை உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் பதுளை மேயர் பிரியந்த அமரசிரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் அல்-ஹிக்மா (4 கோல்), சிறிமல்கொட (5 கோல்), பசறை கெமுனு (4 கோல்) குருத்தலாவை (5 கோல்) அணிகளை வென்று முன்னேறிய அல் - அதான் அணி அரையிறுதிப் போட்டியில் பசறை சென்ட்ரல் அணியை வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இறுதிப் போட்டியில் குருத்தலாவை அல் - இல்மா அணியை வீழ்த்தியே பதுளை அல்-அதான் அணி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இம்முறை நடைபெற்று முடிந்த பதுளை மாவட்ட மட்ட மைலோ கிண்ண போட்டியில் 1ம், 2ம், 3ம் இடங்களையும் முதன் முறையாக முஸ்லிம் பாடசாலை அணிகள் பெற்று சாதனை படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பதுளை தினகரன் நிருபர்

 

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை