ஹமீத் அல்-ஹூசைனி, திஹாரி அல்-அஸ்கர் கல்லூரிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை

ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் ஹமீத் அல்--−ஹூசைனி, திஹாரி அல்-அஸ்கர் கல்லூரிகள் தெரிவாகியுள்ளன.இவ் இறுதிப் போட்டி எதிர்வரும் 7ம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயதிடல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஹமீத் அல்-−ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவர்களின் 80 ஆவது குழுவினர் ஏற்பாடு செய்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான அழைப்பு உதைபந்தாட்ட போட்டியை இம் முறை 12 ஆவது தடவையாக ஏற்பாடு செய்தனர்.

இதேவேளை இந்த சுற்றுப் போட்டி அரையிறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை கொழும்பு குதிரை பந்தய திடல் மைதானத்தில் இடம்பெற்றது.முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியும் திஹாரி அல்-அஸ்கர் கல்லூரியும் மோதிய ஆட்டத்தில் திஹாரி அல்-அஸ்கர் கல்லூரி அணி 3-2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தெரிவானது.

அத்துடன் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஹமீத் அல்-ஹூசைனி அணியும் கொழும்பு இசிபத்தான அணியும் மோதிய ஆட்டத்தில் ஹமீத் அல் -ஹூசைனி அணி 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் திஹாரி அணியுடன் மோதவுள்ளது. இப் போட்டி 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும். இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனத்தின் தலைவர்கள்,கல்லூரியின் அதிபர்,பிரதி ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதேவேளை கடந்த வருடம் சம்பியனாக கொழும்பு ஸாஹிரா அணி தெரிவானதுடன் இரண்டாமிடத்தை கொழும்பு ஹமீத் அல்-−ஹுசைனி கல்லூரி் அணி பெற்றது. இம்முறை இந்த தொடருக்கு 19 பாடசாலைகளின் அணிகள் பங்கேற்றன.

இந்தச் சுற்றுப் போட்டியை திறம்பட நடாத்துவதற்கு 80 ஆவது குழுவின் உறுப்பினர்கள் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

பரீத் ஏ றகுமான்

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை