உலக வங்கியின் தலைவர் மெல்பாஸ்

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க நிதியமைச்சின் உயர் அதிகாரி டேவிட் மெல்பாஸ் பொறுப்பேற்கவுள்ளார்.

மெல்பாஸ், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உலக வங்கி கூறியது. நாளை செவ்வாய்க்கிழமை உலக வங்கியின் 13ஆவது தலைவராக அவர் பொறுப்பேற்பார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மெல்பாஸ் அந்தப் பதவியை வகிப்பார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரை அந்தப் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தார். மற்ற எந்த நாடும் வேறு யாரையும் உலக வங்கித் தலைமைப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கவில்லை.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை