கண்டி அணி 99 ஓட்டங்களுக்குள் சுருண்டது

சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடர் நேற்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.இதில் கண்டி-காலி அணிகள் மோதிய ஆட்டத்தில் காலி அணி 156 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.அவ்வணியின் தலைவர் மலிங்க 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி

சகலவிக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக குஷல் மென்டிஸ் 65 ஓட்டங்களையும் வீரக் கொடி 56 ஓட்டங்களையும் பெற்றனர்.ஏனைய வீரர்கள்

குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.பந்து வீச்சில் கண்டி அணி சார்பாக கசுன் ராஜித,வெண்டர்சே தலா 3 விக்கெட்டையும் பெரேரா,சேனநாயக்க ஆகியோர் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினர்.இதேவேளை 256 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய கண்டி அணி 18.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது.அவ்வணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 35 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் பெற்றதை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

பந்து வீச்சில் காலி அணியின் தலைவர் மலிங்க 7 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும் பதம் பார்த்தனர்.

சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக மாலிங்க, நேற்றுமுன்தினம் முப்பை அணியின் போட்டி முடிந்தவுடன் நாடு திரும்பியுள்ளன. உலக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலாக சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது. எனினும், மாலிங்க ஐ.பி.எல். தொடரில் முழுமையாக விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் அனுமதியளித்திருந்தது

உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு லசித் மாலிங்க உள்ளூர் போட்டியில் பங்கேற்கும் முகமாக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அனுமதி கோரியதுடன், நாடு திரும்பியுள்ளார். நேற்று அதிகாலை நாடு திரும்பிய அவர், கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற கண்டி அணிக்கு எதிரான போட்டியில் காலி அணி சார்பாக விளையாடினார்.

ஏ.ஆர்.பரீத்

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை