பிரெக்சிற்றுக்கான கால அவகாசம் ஒக்டோர் 31வரை நீடிப்பு

SUG

பிரெக்சிற்றுக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களினால் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பிரெக்சிற்றுக்கான கால அவகாசத்தை மீண்டும் நீடிப்பது தொடர்பான கலந்துரையாடல் பிரஸ்ஸல்ஸில் சுமார் 5மணித்தியாலங்களாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் இடம்பெற்றிருந்தது. இதற்கமையவே, பிரெக்சிற்றுக்கான கால அவகாசத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக குறுகிய கால அவகாசத்தை நீடிக்கவே பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே விரும்பியிருந்தார்.  எனினும்,  ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து முடிந்தவரையில் கூடிய விரைவில் விலகவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான குறுகியகால கால அவகாசத்தை ஜுன் 30ஆம் திகதிவரை   பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஏற்கெனவே கோரியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து இவ்வருடம் மார்ச் 29ஆம் திகதி பிரித்தானியா வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் நாளை (ஏப்ரல் 12ஆம் திகதிவரை) இதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 

Thu, 04/11/2019 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை