2019 பட்ஜட் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐ.தே.க., த.தே.கூ., இ.தொ.கா ஆதரவு

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம்  45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மூன்றாவதும் இறுதியுமான இவ்வாக்கெடுப்பில் ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2019 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Fri, 04/05/2019 - 19:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை