பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 19 அரச ஊழியர் சங்கங்கள் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 19 அரச ஊழியர் சங்கங்கள் பேரணி-19 Govt Employee's Assoiciation Rally

சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் போனஸ் கொடுப்பனவுகள் ஏனைய உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதுபோல் தமக்கும் தரப்பட வேண்டும் எனக் கோரி சுமார் 19 அரச ஊழியர்களின் சங்கங்கள் இன்று (04) கொழும்பு புறக்கோட்டை புகையிர நிலையத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை எதிர்ப்புப் பேரணி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 19 அரச ஊழியர் சங்கங்கள் பேரணி-19 Govt Employee's Assoiciation Rally

நீதித் திணைக்கள சட்ட வல்லுனர்ளுக்கு சம்பளம் அதிகரித்துக் கொடுக்கப்பட்டுள்ளமை, அரச உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் போனஸ் மற்றும் வாகன கொள்வனவு பேமிட் சலுகைகைள் போன்றன தமக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு, பொறியிலாளர் சேவைகளில் உள்ளவர்கள், நில அளவையாளர் சேவைகளில் உள்ளவர்கள், அரச திட்டமிடல் சேவையாளர் தரங்களில் உள்ளவர்கள் உள்ளிட்ட 19 அமைப்புகளின் சங்கங்களே அரசுக்கு எதிராக தமது எதிர்ப்புப் பேரணிகளை மேற்கொண்டிருந்தனர். 
இதனையடுத்து இன்று (04) பிற்பகல் இது தொடர்பான தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 19 அரச ஊழியர் சங்கங்கள் பேரணி-19 Govt Employee's Assoiciation Rally

இதன் காரணமாக, லேக் ஹவுஸ் சுற்று வட்டத்திற்கு அருகில், லோட்டஸ் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரையான பகுதி தற்காலிக மூடப்பட்டதோடு, அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்க்கது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 19 அரச ஊழியர் சங்கங்கள் பேரணி-19 Govt Employee's Assoiciation Rally

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 19 அரச ஊழியர் சங்கங்கள் பேரணி-19 Govt Employee's Assoiciation Rally

(ஏ.எஸ்.எம். ஜாவித்)

Thu, 04/04/2019 - 17:59

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை