100 மெ.வோ மேலதிக மின்சாரம் கொள்வனவு செய்யத் தீர்மானம்

பிரிட்டன், ஹொங்கொங், ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்  

மின் விநியோகத்தை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுக்கமைய பிரிட்டன், ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங் நிறுவனங்களிடமிருந்து 100மெகா வோட் மேலதிக மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.  

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமைய இந்த நிறுவனங்களிடமிருந்து 6மாத காலத்துக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

இதற்கமைய நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய பல்லேகல கிறிட் துணை நிலையத்துக்காக 24மெகா வோட் மின்சாரத்தையும் காலி கிறிட் துணை பிரிவுக்காக 10மெகா வோட் மின்சாரத்தையும் 1கி.வோ. 30.20ரூபாவுக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் பிரிட்டனின் Aggreko International Project ltd என்ற நிறுவனத்துக்கும் மஹியங்கனை கிறிட் துணை நிறுவனத்துக்காக 10கிலோ வோட் மின்சாரத்தை 1கி.வோ 30.58ரூபாவுக்கும் பொலன்னறுவை கிறிட் துணை பிரிவிற்கு 8மெகா வோட் மின்சாரத்தை 1கி.வோ 30.63ரூபாவுக்கும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட் இராச்சியத்தின் Altaaqa Alrerrative Solution Global KZE என்ற நிறுவனத்திடமும் ஹம்பாந்தோட்டை துணை பிரிவுக்கு 24மெகா வோட் மின்சாரத்தை 1கி.மெ.வோ. 28.43ரூபாவுக்கும் ஹொரண கிறிட் துணை பிரிவுக்கான 24மெ.வோ. மின்சாரத்தை 1கி.வோ. 28.70ரூபாவுக்கும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் ஹொங்கொங்கிலுள்ள V Power Holdings Ltd என்ற நிறுவனத்திடம் 6மாத காலத்திற்காக வழங்குவதற்காக மின்சக்தி `மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவிகருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

மின்விநியோகத்தை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக 100 மெகா வோர்ட் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 04/12/2019 - 08:33


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக