ஒலுவில் துறைமுக வளாகத்தினுள் மணல் விற்பனைக்கு அதிரடி தடை

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அறிவிப்பு

ஒலுவில் துறைமுக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மணலை அகழ்ந்து விற்பனை செய்வதற்கு அதிரடித் தடையை​ துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விதித்துள்ளார்.  

கொழும்பு துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் (10) துறைமுக அதிகாரசபையின் உயரதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.  

துறைமுக அதிகாரசபையினால் திறந்த விலை மனுக்கோரல் ஒன்று மண் அகழ்ந்து விற்பனை தொடர்பில் பத்திரிகை விளம்பரம் கோரப்பட்டிருந்தது.  

ஒலுவில் பள்ளிவாயல் சம்மேளனம் மற்றும் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அதிரடி நடவடிக்கையாக மண் விற்பனையை பிரதி அமைச்சர் நிறுத்தியுள்ளார்.  

ஒலுவில் துறைமுகம் தொடர்பான ஏனைய சகல விதமான மீனவச் சமூகத்தின் நலன் கருதிய பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக பிரதி அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.  

இச்சந்திப்பில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவவிதாரன உள்ளிட்ட பல முக்கிய உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

(திருமலை குறூப் நிருபர்)

Fri, 04/12/2019 - 08:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை