பதவி விலகுவது குறித்து பிரிட்டன் பிரதமர் கருத்து

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, இரு முறை தோல்வியைத் தழுவிய தமது பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படுமெனில், பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் தமது பழைமைவாத கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

பிரெக்சிட் ஒப்பந்தங்களின் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தையில், புதிய தலைமைத்துவத்திற்கான விருப்பம் எழுந்திருப்பதை அவர் வரவேற்றார்.

இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து வாக்களிக்கவிருக்கின்றனர். அவர்களிடையே எட்டு விதமான வாய்ப்புகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் ஏதுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுதல் முதல் பிரெக்சிட் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவது வரை, அவை பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள், பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் இணைந்திருக்கும் திட்டம், உறுப்பினர்களிடையே பிரபலமாகத் திகழ்ந்து வருவதாய் அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை