திகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை

கண்டி, திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பிரதமரின் ஆலோசனையின் கீழ் நஷ்டஈடுகள் வழங்கப் படவுள்ளதாக அமைச்சர் எம்.எச்ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள்  எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் 2018  திகனமற்றும் கண்டியை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈடுகளை வழங்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்பிரகாரம் மிகக் குறுகிய காலத்தில் இச்சொத்துக்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன.நிதியமைச்சு, உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களுக்கு கண்டி, திகன சம்பவத்தில் நிகழ்ந்த சொத்துக்களின் மதிப்பீட்டு விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றின் கணிப்பீட்டுப் பெறுமதிகள் கிடைத்ததும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த நஷ்டஈடுகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட சொத்துக்களில் இது வரை 174சொத்துக்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப் படவில்லை.

இது வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் பிரகாரம் பதினேழு கோடி ஐந்து இலட்சத்து அறுபத்தி ஏழாயிரம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Thu, 03/07/2019 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை