பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்கள்; விண்ணப்பங்கள் கோருமாறு பணிப்பு

மேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதால், விண்ணப்பங்கள் நாளை வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் எம். அஸாத் சாலி பணிப்புரை விடுத்துள்ளார்.  

இதனடிப்படையில் கல்வி அமைச்சு சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூல பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்ளைக் கோரவுள்ளது.  

இது தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ளதாவது: போதுமான ஆசிரியர்கள் இல்லாதுள்ள பாடசாலைகளில் பயியலும் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை அடைய முடியாதுள்ளனர். அசிரியர் வெற்றிடங்களை நிரப்பியே மாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.   மேலும் காலியில் இடம்பெற்ற ஆளுநர்கள் சந்திப்பின்போது, கல்வி நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்குவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.  

 மேல் மாகாணத்தின் கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் இப்புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.மேல் மாகாணப் பாடசாலைகளில் சுமார் 200 பட்டதாரி ஆசிரியர் வெற்றிடம் நிலவுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.  

Thu, 03/07/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை