வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க நடவடிக்கை

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைபெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள், தொலைத்தொடர்புகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டுவேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, தொழில்அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் அங்குள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், தூதரகங்களில் வாக்களிப்பதற்கு இடமளிப்பது அரசியல் மயப்படுத்தப்பட்டதாக அமைந்துவிடும். யார் அரசாங்கம் அமைத்தாலும் அவர்களால் நியமிக்கப்படும் தூதுவர்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும். இருந்தபோதும் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமைச்சர் கூறினார்.

Tue, 03/19/2019 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை