பால்மாவை பதுக்கி வைத்தால் கடும் சட்ட நடவடிக்கை

பால்மா வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்தது.  

பால்மாவுக்குத் தட்டுப்பாடு நிலவுவது போல் காண்பித்து சில வர்த்தகர்கள் பால்மாக்களை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அதிகாரசபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இதற்கிணங்க பதுக்கிவைக்கப்பட்டுள்ள பால்மா தொடர்பில் ஆராய விசேட செயற் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பால்மாக்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.   

இதேவேளை, அன்றாட பாவனைக்காக கொள்வனவு செய்யப்படும் பால்மாக்களை தற்போது சந்தையில் காணமுடியாதுள்ளதாகவும் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.(ஸ)  

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Tue, 03/19/2019 - 09:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை