பதக்கம் பெற்ற வீரர்கள் அமைச்சரால் கெளரவிப்பு

மாற்று ஆற்றல் படைத்த விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட வீரர்கள் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் 4 வெள்ளிப்பதக்கம் உள்ளடங்கலாக 6 பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். இவர்களை கௌரவிக்கும் முகமாக ஊடகம் மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பணப்பரிசில்களை வீரர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வு கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

கடந்த 14ஆம் திகதி முதல் 21 ம் திகதி வரை அபுதாபி விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விசேட ஒலிம்பிக் உலக கிண்ண போட்டியில் 192 நாடுகளைச் சேர்ந்த 7500 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தங்கப்பதக்கம் பெற்ற 25 மீற்றர் நீச்சல் போட்டியில் சசிக்க அனுரத்த, மற்றொரு வீரர் சஜித் குமார ஆகியோர் பெற்றனர். வெள்ளிப்பதக்கம் தினாகாந், காவிந்த, அருன் பிரசாந், தமிந்து முதுநாயக்க ஆகியோருக்கு பணப்பரிசு அமைச்சரால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ருவன் விஜயவர்தன :கடந்த காலங்களில் இந்த வீரர்கள் சமூக மட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர்.அவர்களை எங்களது அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி ஊக்கப்படுத்தவுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்து பேசி விசேட திட்டம் வகுத்து செயல்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விசேட தேவையுள்ள வீரர்களால் நாட்டுக்கு கிடைத்த கௌரவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் இவர்களை சரியான முறையில் பயிற்றுவித்து அவர்களை நல்லதொரு வீரர்களாக உருவாக்க திட்டம் தீட்டியுள்ளோம்.கொழும்பு.காலி,கம்பஹா,களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்களாவர்.விசேட ஒலிம்பிக் போட்டிகளுக்கு 18 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.4 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் இந்த போட்டி 2023 ம் ஆண்டு சுவீடனில் இடம்பெறவுள்ளது.

ஏ.ஆர். பரீத்

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை