மோ.வாகன பதிவுத் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மாயம்

கோவைகளை தாறுமாறாக அள்ளிக்குவிக்கும் கைதிகள்

மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தில் ஆயிரக்கணக்கான பதிவு ஆவணங்கள் காணாமற்போயிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் மேற்பார்வை எம்.பி ஹிருனிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தில் ஆவணங்களை அப்புறப்படுத்தும் பணியில் நீண்டகாலமாக சிறைக் கைதிகளே ஈடுபடுத்தப்பட்டு வருவதனால், ஆவணக்கோவைகள் யாவும் எவ்வித ஒழுங்கு விதிமுறைகளுமின்றித் தாறுமாறாக அள்ளிக் குவிக்கப்படு வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன பதிவு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் முறையாக களஞ்சியப்படுத்தப்படாததால், இதுவரை சுமார் 5 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் வரையிலான ஆவணங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளபோதும் அவற்றை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு,துறைமுகங்கள்,கப்பல்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹிருனிக்கா இவ்வாறு தெரிவித்தார்.

மோட்டார் வாகன பதிவுத் திணைக்கள அதிகாரிகளிள் ஊழல் மற்றும் கவனயீனம் காரணமாகவே பதிவு ஆவணங்கள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறினார். அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்திருந்தார். இவ்விபத்துடன் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பியின் மகனும் சம்பந்தப்பட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணைக்காக விபத்துக்கு காரணமான வாகனத்தின் எந்தவொரு பதிவும் மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தில் இல்லை. இலங்கையிலுள்ள முதலாவது ஊழல் நிறைந்த திணைக்களம் என்றால், அது மோட்டார் வாகன பதிவுத் திணைக்களமாகத்தான் இருக்கும்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை