சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு; சுவரொட்டி பிரசாரம்

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொழும்பு சுற்றுலா பொலிஸ் பிரிவு மற்றும் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் இணைந்து, சுவரொட்டி பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய, பிராந்திய பணிப்பாளர் ஹெலன் கேட் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் கிஷு கோமஸ் ஆகியோரினால் கடந்த வாரம், கோட்டை புகையிரத நிலையத்தில் இவ்விழிப்புணர்வு சுவரொட்டிபிரசாரம் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தின் போது,  இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன்,  நாடு முழுவதும் எவ்வாறு பயணிப்பது? என்பது தொடர்பிலும் விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் இச்சுவரொட்டி பிரசாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரமானது, அடையாளம் காணப்பட்ட சுமார் 45புகையிரத நிலையங்கள், பிரதான பஸ் தரிப்பிடங்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நாடு முழுவதுமுள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திட்டமிட்ட குற்றம் மற்றும் சட்டப்பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, பொலிஸ் சுற்றுலாப் பிரிவின் பணிப்பாளர்  ஜே.எஸ். வீரசேகர, பொலிஸ் சுற்றுலாப் பிரிவின் பொறுப்பதிகாரி சி.ஐ. பிரபாத் விதானகம, SLTDA அதிகாரிகள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும்பொலிஸ் சுற்றுலா பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Wed, 03/13/2019 - 09:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக