வரிச்சலுகை வாகன கொள்வனவு தடையை நீக்குவதாக அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்களுக்கும் வரிச்சலுகையுடனான வாகனம் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மே மாதம் தொடக்கமும் அரச ஊழியர்களுக்கு ஜூன் மாத்திலிருந்தும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். 

2019 வரவு செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றி அவர், 52 நாள் திருட்டு அரசாங்கம் காரணமாக நாட்டுக்கு 6.4பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் உரையாற்றிய அவர், நுண்கடன் பிரச்சினையை கடந்த அரசு தான் ஏற்படுத்தியது.இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது. நுண்கடனை கட்டுப்படுத்த முறையான திட்டம் வகுத்தோம். வறுமை நிலையிலிருந்த 40ஆயிரம் பெண்களின் கடனை இரத்துச் செய்தோம். 

9 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு பேச்சு எழுதிக் கொடுப்பது யார்? பொய்யான தகவல்களை தான் அவர் முன்வைத்தார். 

பொருளாதார சலுகைகள் பெறுவதற்காக ஜீ.எஸ்.பி பிளஸை மீள பெற்றதாக குற்றஞ்சாட்டுகின்றனர். வெள்ளை  வான் கலாசாரத்தை நிறுத்தியது காட்டிக் கொடுப்பா? நாட்டிற்கு  ஜனாநாயகத்தை கொண்டுவந்ததால்தான் ஜீ.எஸ்.பி பிளஸ் கிடைத்தது. நாட்டை பலப்படுத்தியது காட்டிக் கொடுப்பா? 

கடந்த இரு வருடங்களில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 

நாம் பெற்ற வெளிநாட்டு பிணைமுறி கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. 52 நாள் திருட்டு அரசால் இந்த நிலை ஏற்பட்டது. திருட்டு அரசின் 52 நாள் காரணமாக 6.4 பில்லியன் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது. 2025இல் செல்வந்த நாடாக மாற்றுவதும் தொழில் முயற்சி இயலுமையுள்ள நாடாகவும் மாற்றுவது எமது நோக்கமாகும். 

பொருளாதார தூர நோக்கற்றவர்கள் நிவாரண பொதி எதுவும் இல்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.இந்த அடிமை மனநிலையால் நாடு பின்னோக்கி சென்றது. யாருக்கும் இரண்டாம் பட்சமாகாத இலங்கையொன்றை உருவாக்கவோ கம்பெரலிய திட்டம் முன்வைக்கப்பட்டது. 

விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினாலும் விவாசாயத்துறை முன்னேற்றத்திற்கு 87 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த ஆட்சியலும் இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டது கிடையாது. அறுவடைகளை சந்தைப்படுத்த உதவி வழங்கப்படும். சகதியில் இருக்கும் விவசாயிக்கு சர்வதேச சந்தையில் தொழில் முயற்சியாளராக மாற்றுவோம். 

மீன்பிடித்துறை முகங்களை அபிவிருத்தி செய்ய 1.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை,பேசாலைகளில் மீன்பிடித்துறை முகங்களை அமைக்க இருக்கிறோம். 

சிறிய வாகனங்களுக்கு நிவாரணம் வழங்கியதால் வாகன நெரிசல் அதிகரித்தது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடையவும் இது காரணமாக அமைந்தது. 

அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் வாகனம் பெற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் மே மாதம் முதல் நிவாரண விலையில் வாகனம் பெற அனுமதி வழங்கப்படும். அரச ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் நிவாரண அடிப்படையில் வாகனம் பெற சந்தர்ப்பம் வழங்கப்படும். 

இண்டர்நெட் ஊடாக வர்த்தகம் செய்வதற்கு 3.5வீத வரி அறவிடப்படுவது குறித்து குற்றஞ்சாட்டப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் போதே இந்த வரி அறிவிடப்படும். உள்நாட்டு பொருட்களை அறிவிட இந்த வரி அறிவிடப்படாது. 

5,000ரூபா மாதாந்தம் வரி வருமானம் பெறும் வங்கிக் கணக்குள்ளவர்களிடம் சிறிய வரியொன்று விதிக்கப்பட்டுள்ளது. 12இலட்சம் ரூபாவுக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் உள்ளவர்களுக்கே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. 

கடனட்டை ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்யும் போது ஒரு வீத வரி மட்டுமே விதிக்கப்படும். 

எந்த அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு 107 வீத சம்பள உயர்வு வழங்கியது கிடையாது. இராணுவத்தை விற்றே கடந்த அரசாங்கம் ஆட்சியில் நீடித்தது. 

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

Wed, 03/13/2019 - 09:16


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக