மவுசாக்கலையில் செயற்கை மழை

8000 அடி உயரத்தில் பரீட்சிப்பு;
45 நிமிடங்கள் செயற்கை மழை

நாட்டில் கடும் வறட்சி நிலவுவதால் நீரேந்து பகுதிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்திக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு செயற்கை மழையை பெய்ய வைக்கும் நடவடிக்கையை மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய  அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதற்கமைய நேற்று மவுசாக்கலை நீரேந்து நிலையப் பகுதியில் 8000 அடி உயரத்திலிருந்து மேகக் கூட்டத்தைப் பயன்படுத்தி விமானம் மூலம் செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டது.

சுமார் 45 நிமிடங்கள் இவ்வாறு செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டுள்ளது. மேகக் கூட்டத்துள் இரசாயன திரவத்தை செலுத்தி இவ்வாறு மழை பெய்ய வைக்கப்பட்டது. இவ்வாறு செயற்கை மழையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நிதியமைச்சும் விமானப்படையும் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த செயற்கை மழைக்கான தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்க தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. அதற்கமைய தாய்லாந்து விசேட பொறியியலாளர் குழு நேற்றைய தினம் இதில் பங்கேற்றனர்.

 

Sat, 03/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை