மன்னார் மனித புதை குழி தொடர்பில் மேலதிக ஆய்வுகளை செய்ய முடியும்

தற்போதைய கார்பன் அறிக்கையை வைத்து காலவரையறை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவையில்லை

மன்னார் மனித புதை குழி தொடர்பாக தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையறையை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலதிக ஆய்வுகளையும் செய்ய முடியு மென காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலை வர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். மன்னார் மனித புதை குழி தொடர்பாகவும்,கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளை நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை 2 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாளிய பீரிஸ் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மனித புதைகுழியின் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ள விதம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையை மட்டும் வைத்து கால வரையறையை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

மன்னார் குறூப் நிருபர்

 

 

Sat, 03/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை