அச்சம் கலந்த இறுதிக் குரல் பற்றிய விபரம் வெளியானது

விபத்துக்குள்ளான எத்தியோபிய விமானத்தில் இருந்து இறுதியாக வந்த குரல் அச்சத்தில் நடுநடுங்கிப் போயிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் சில விநாடிகளில் சராசரியாக மணிக்கு 370 முதல் 463 கிலோமீற்றர் வேகத்தில் இயக்கப்படும். ஆனால், விபத்து நடந்தபோது புறப்பட்ட சில விநாடிகளில் மணிக்கு 740 கிலோ மீற்றர் என்ற வேகத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள்ளாகவே விமானி பிரேக, பிரேக் என அச்சம் கலந்த குரலுடன் கூறி, விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் 14 ஆயிரம் அடிக்கு உயர்த்த அனுமதி கோரியதாகவும், மலைகள் இருப்பதால் இந்த முடிவை விமானி எடுத்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

10 ஆயிரம் அடிக்கு மேல் சென்றதும் விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்ப விமானி அனுமதி கோரினார். இடதுபுறம் திருப்பினால் நகர்ப்பகுதி இருப்பதால் வலது புறமாக திருப்பி விமான நிலையத்துக்கே வருமாறு வான்போக்குவரத்து அனுமதி அளித்தது. அடுத்த சில நொடிகளில் விமானம் பறப்பதைக் குறிக்கும் வகையில் ரேடாரில் மின்னும் புள்ளி மாயமானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த ஒக்டோபரில் நடந்த இந்தோனேசியாவின் லயன் ஏர் விமான விபத்துக்கும் இந்த எத்தியோப்பிய விமான விபத்துக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் போக்குவரத்து அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் அந்த ஒற்றுமை, தெளிவாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.

விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டி, குரல் பதிவுப் பெட்டி ஆகியவற்றிலிருந்து கிடைத்த தகவல்கள் அதனை உறுதிசெய்வதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

சென்ற வாரம் நடந்த விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை 30 நாட்களில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை