மொசம்பிக், சிம்பாப்வேயில் சூறாவளியால் பயங்கர சேதம்

பொசம்பிக் நாட்டின் துறைமுக நகரான பெய்ராவில் இடாய் சூறாவளி பயங்கர சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி கடந்த வியாழக்கிழமை மணிக்கு 177 கிலோமீற்றர் வேகத்தில் தரையை கடந்த போதும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பெய்ரா நகரை உதவிக் குழுக்கள் அடைந்தள்ளன.

மரங்கள், வீடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டதாகவும் வீடுகள் சேதமாகி இருப்பதாகவும், கொங்கிறீல் சுவர்களும் தூக்கி எறியப்பட்டிருப்பதாகவும் செம்பிறை சங்கத்தின் மதிப்பீட்டுக் குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூறாவளியால் தெற்கு ஆபிரிக்கா எங்கும் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டுள்னர்.

சிம்பாப்வேயின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக அந்நாட்டு ஊடக அமைச்சர் நிக் மக்வானா குறிப்பிட்டுள்ளார்.

இதில் மொசம்பிக்கில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பெரும்பாலானவர்கள் பெய்ரா நகரத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மாலாவியும் இந்த சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக்கு முன்னர் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தினால் குறைந்தது 122 பேர் கொல்லப்பட்டனர்.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை