அமெரிக்க தாய்க்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒரே பிரசத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிகாலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் சுகப்பிரசவத்தில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் பிறந்தன.

அவற்றில் நான்கு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளன. தாய் தெல்மா சியாகா நலமுடன் உள்ளார். 508 கிராம் முதல் 970 கிராம் வரை எடைகொண்ட 6 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் ஆறும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகளவில் 470 கோடி பிரசவங்களுக்கு ஒருமுறை இதுபோன்று ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

Tue, 03/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை