யாழில் முதன் முறையாக மின்னொளியில் இருபதுக்கு இருபது கிரிக்ெகட் போட்டி

விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி யாழில் முதன் முறையாக மின்னொளியில் நடத்தப்படவுள்ளது.

யாழில்.உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு என்பன (28) யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.

அதன் போது போட்டியினை நடாத்தும் விஜயரட்ணம் பிரபன் கருத்து தெரிவிக்கையில்,

எனது தந்தையாரின் ஞாபகார்த்தமாகவே குறித்த போட்டியினை நடாத்துகின்றேன். மின்னொளியில் யாழில் முதல் முதலாக நடத்த தீர்மானித்துள்ளோம்.

போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து , போட்டிகள் ஆரம்பமாகும் தினமும் மாலை 5.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 8.30 மணிக்கு ஒரு போட்டியும் என இரண்டு போட்டிகள் நடத்தப்படும்.

குறித்த போட்டியில் சென்ரல் விளையாட்டு கழகம் , கே.சி.சி.சி. விளையாட்டு கழகம் , பற்றிசியன்ஸ் விளையாட்டு கழகம் , ஜொலிஸ்டார் விளையாட்டு கழகம் , திருநெல்வேலி மத்திய விளையாட்டு கழகம், சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம், யுடீ விளையாட்டு கழகம் மற்றும் கிறாஸ்கோப்பர் விளையாட்டு கழகம் என்பன மோதவுள்ளன.

முதல் நாள் சுற்று போட்டியில் யுடீ விளையாட்டு கழகமும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகமும் மோதவுள்ளன.

புற்தரை மைதான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

அதேவேளை யாழில் புற்தரை (டேவ்) மைதான வசதிகள் இல்லை. இந்த போட்டிகளை புற்தரையில் நடத்தவே எமக்கு விருப்பம். ஆனால் யாழில் அதற்கான வசதிகள் இல்லை.

பாடசாலை மட்டங்களில் விளையாடும் திறமையான வீரர்கள் யாழில் சாக்கில் (மற்றிங்) விளையாடி பழகி வெளியே கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சென்று புற்தரையில் விளையாடும் போது பல சவால்களை எதிர்நோக்கு கின்றார்கள். அதனால் அவர்கள் தமது திறமைகளை அங்கே வெளிப்படுத்த முடியவில்லை. யாழில் இருந்து தேசிய அணிக்கு செல்ல கூடிய அளவுக்கு சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள். தேசிய அணிக்கு இல்லாவிடினும் டீ , ஊ அணிக்காவது விளையாடும் அளவுக்கு வீரர்கள் உள்ளனர். அவர்கள் இங்கே மற்றிங்ல் விளையாடி பழகி புற்தரையில் விளையாட முடியாது தடுமாறுகின்றார்கள்.

எனவே யாழில். புற்தரை மைதானங்களை உருவாக்க உரிய தரப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு எமது வீரர்களின் திறமைகளை வளர்த்து தேசிய அளவில் அவர்களை பிரகாசிக்க செய்ய வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்தார்.

புங்குடுதீவு குறுப் நிருபர் 

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை