மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர பயிற்சியாளராக ஓலே குன்னார்

இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து கழக அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ஓலே குன்னார் சால்ஸ்கஜேர் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய 46 வயதான நோர்வேயின் ஓலே குன்னார் சால்ஸ்கஜேர், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு அந்த அணியின் பயிற்சியாளருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

சால்ஸ்கஜேரின் தலைமையில் மென்செஸ்டர் யுனைடெட் அணி இறுதியாக விளையாடிய 19 போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ப்ரீமியர் லீக் தொடரில், மென்செஸ்டர் யுனைடெட் அணி படுதோல்விகளை சந்தித்ததன் பின்னணியில், அப்போதைய பயிற்சியாளராக இருந்த போர்த்துக்கல் அணியின் முன்னாள் வீரர் ஜோஸ் மௌரின்ஹோ அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஜோஸ் மௌரின்ஹோ தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில், இரண்டு முழு தொடர்களில், ஐரோப்பா கோப்பா, லீக் கிண்ண சம்பியன் பட்டங்களை மென்செஸ்டர் யுனைடெட் அணி வென்றது.

கடந்த ஆண்டு ப்ரீமியர் லீக் தொடரின் மோசமான பெறுபேறுகள் அணி நிர்வாகத்தை கடுமையாக பாதிக்க, அவர் பயிற்சியளார் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அணியின் புதிய பயிற்சியாளராக நோர்வேயின் ஓலே குன்னார் சால்ஸ்கஜேர் நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே செல்ஸி அணியின் பயிற்சியாளராக இருந்த போது மௌரின்ஹோ இடையிலேயே நீக்கப்பட்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதன் பிறகு எழுச்சிக்கண்ட மென்செஸ்டர் யுனைடெட் அணி, இங்கிலாந்தில் உள்ள கால்பந்து கழகங்களுக்கிடையில், அண்மையில் நடைபெற்று முடிந்த கால்பந்து லீக் கிண்ண தொடரில், ஆறாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

தற்போது, நடப்பு இங்கிலீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரிலும், 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரிலும், காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

முன்னாள் முன்கள வீரரான சால்ஸ்கஜேர், நோர்வே அணிக்காக 1995ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு காலப்பகுதி வரை 67 போட்டிகளில் விளையாடி 27 கோல்களை அடித்துள்ளார்.

இதுதவிர மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக, 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு காலப்பகுதி வரை விளையாடியுள்ளார். அந்த அணிக்காக அளப்பரிய பங்கை ஆற்றியுள்ள அவர், அந்த அணிக்காக 235 போட்டிகளில் விளையாடி 91 கோல்களை அடித்துள்ளார்.

அத்தோடு பல கழகங்களுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ள அவர், 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை, 23 வயதுக்குட்பட்ட மென்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பல வெற்றிகளுக்கு துணை நின்றுள்ள அவர், அணியுடனான நெருங்கிய தொடர்பின் பின்னணியிலேயே தற்போது நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை