வட மாகாணத்தில் 862 டொக்டர்கள் பற்றாக்குறை

வட மாகாணத்தில் நிலவும் ​ெடாக்டர்கள் மற்றும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி. சிவமோகன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் 862 ​ெடாக்டர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக தெரிவித்த அவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் 84 ​ெடாக்டர்களுக்கான வெற்றிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் 16 மருத்துவமனைகளில் பெரும் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவும் அதேவேளை, ஒரு நிரந்தர டாக்டர் கூட இல்லாத 10 வைத்தியசாலைகள் காணப்படுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்றத்தில் நேற்று சுகாதாரம் மற்றும் மகளிர், சிறுவர் விவகாரம் தொடர்பான அமைச்சர்கள் மீதான நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே சிவமோகன் எம். பி. இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மருத்துவத்துறையில் பட்டமேற்படிப்பு பூர்த்தி செய்துள்ள 300ற்கு மேற்பட்டவர்கள் வடக்கில் உள்ளபோது அவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு இதுவரை திறமை அடிப்படையில் தொழில் வழங்கப்படவில்லை.

மேலும் 82 பேர் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துக்கொண்டுள்ள நிலையில் மருத்துவச்சங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையிலும் நீண்ட காலமாக மருத்துவ சபைகளின் நேர்முகப்பரீட்சைக்காகக் காத்திருக்கின்றனர்.

வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்குள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அங்கு கடமைக்குச் சமுகமளிப்பதில்லை.

அவர்களுக்கான வசதிகள் வழங்கப்படாமையே இதற்குக் காரணம். இது விடயத்தில் சுகாதார அமைச்சர் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைப் பிரிவு இல்லாமையினால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. மன்னார், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் நிலவும் டாக்டர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை