இந்தோனேசியாவில் கைகோர்த்து நடந்த 5 ஜோடிகளுக்கு பிரம்படி

இந்தோனேசியாவில் பொது இடத்தில் கைகோர்த்து நடந்து சென்ற 5 ஜோடிகளுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சுமத்ரா தீவருகே உள்ள பண்டா அச்சே என்ற இடத்தில் திருமணத்துக்கு முன் பொது இடத்தில் கைகோர்த்தபடி நடத்தல், அணைத்தபடி செல்வது, தவறாக நடந்துகொள்வது உள்ளிட்ட நடத்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அண்மையில் காவலர்களால் 5 ஜோடிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சிறை தண்டனையை நிறைவேற்றிய பின், பொது இடத்தில் மண்டியிட வைத்து அவர்களுக்கு 4 முதல் 22 முறை பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.

ஜோடிகள் வலியால் துடிப்பதைக் காண்பது பிறருக்குப் பாடமாக அமையும் என அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மது அருந்துதல், சூதாட்டம், ஓரினச்சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கும் இதே பாணியில் தண்டனை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடான இந்தோனேசியாவில் இஸ்லாமிய சட்ட அமுல்படுத்தப்படும் ஒரே மாகாணமாக அச்சே உள்ளது.

Fri, 03/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை