கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு

அநுராதபுரம் மேற்கு தினகரன் , கலென்பிந்துனுவெவ தினகரன் நிருபர்கள்

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்குட்பட்ட கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் ஜெஸ்மின் இல்லம் சம்பியனாக தெரிவாகியது.வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.ஏ.எம்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஜெஸ்மின், லோட்டஸ், ரோஸ் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே சகல போட்டிளும் நடைபெற்றன.

ஜெஸ்மின் இல்லம் 375 புள்ளிகளைப்பெற்று முதலாமிடத்தையும் ,ரோஸ் இல்லம் 340 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தையும் , லோட்டஸ் இல்லம் 310 புள்ளிகளைப்பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

கலென்பிந்துனுவெவ கல்வி வலய பணிப்பாளர் டப்ளியு.எம்.பீ.கே.விக்ரமசிங்க ,உதவி பணிப்பாளர் வை.ஆர்.டீ.எல்லாவல , அபிவிருத்தி பணிப்பாளர் எம்.பீ.செனவிரத்ன திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பீ.ஜோசப் கஹட்டகஸ்திகிலிய கோட்ட கல்வி பணிப்பாளர் மற்றும் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை தவிசாளர் கே.திலக்கரத்ன, ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருந்திரலானோர் கலந்து சிறப்பித்தனர்.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை