ஆஸி. அரசை தோற்கடித்து சட்டமூலம் நிறைவேற்றம்

தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு உதவும் சட்டமூலம் ஓன்று அந்நாட்டு அரசை தோற்கடித்து எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 68 ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அரசொன்று இவ்வாறான தோல்வியை சந்திப்பது இது முதல் முறையாகும்.

நேற்று இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் சுயாதீன எம்.பிக்கள் மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பிக்கள் இணைந்து சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம் 74 க்கு 75 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பழைமைவாத கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவை அமைந்துள்ளது. இந்த நகர்வானது பிரதமர் ஸ்கொட் மொரிசன் அரசின் சர்ச்சைக்குரிய குடியேற்றக் கொள்கைக்கும் பெரும் பின்னடைவாக உள்ளது.

அவுஸ்திரேலியா கடந்த 2013 தொடக்கம் படகுகளில் தஞ்சம் கோரி வருபவர்களை கடல் கடந்த நாவுரு மற்றும் பபுவா நியூகினி முகாம்களுக்கு அனுப்பி வருகிறது. இங்குள்ள அகதிகளின் மருத்துவ சகிச்சைக்கான உரிமையை அங்கீகரித்தே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

பாராளுமன்ற கீழவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் இந்த சட்டமூலம் சட்டமாவதற்கு முன் பாராளுமன்ற மேலவைக்கு இந்த வார கடைசியில் விடப்படவுள்ளது.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை