10ஆவது சர்வதேச பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டி கொழும்பில்

கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை 10 வது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தடகளப் போட்டிகள் எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும்.

இலங்கை சர்வதேச பாடசாலைகள் சம்மேளனத்துக்கு சொந்தமான முக்கிய 21 சர்வதேச பாடசாலைகளின் விளையாட்டு வீர, வீராங்கனைகளில் 3000 க்கும் அதிகமானோர் பங்குபற்றும் இந்தப் போட்டியில் 7 வயதுக்கு கீழ், 9 வயதுக்கு கீழ், 11 வயதுக்கு கீழ், 13 வயதுக்கு கீழ், 15 வயதுக்கு கீழ, 17 வயதுக்கு கீழ், 19 வயதுக்கு கீழ், 20 வயதுக்கு கீழ் என்னும் வயதுகளில் ஆண்கள் பெண்ளுகளுக்கான 130 போட்டிகள் நடைபெறவுள்ளன. சர்வதேச அமைச்சூர் தடகளப் போட்டிகள் சம்மேளனத்தின் போட்டி விதி மற்றும் சர்வதேச பாடசாலைகள் தடகள விளையாட்டு சம்மேளன விதிமுறைகளின் கீழ் இலத்திரனியல் கால மற்றும் அவைகள் கணக்கிடலுடன் இம்முறை போட்டியை நடத்த ஏற்பாட்டு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். போட்டியின் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக இலங்கை அமைச்சூர் தடகளப் போட்டி விளையாட்டுகள் சம்மேளனத்தின் தகுதிவாய்ந்த 200 தொழில்நுட்ப அதிகாரிகள் பங்குபெறவுள்ளார்கள்.

போட்டியின் ஆரம்ப விழா 16ம் திகதி காலை 8.00 மணிக்கு கேட்வே சர்வதேச பாடசாலைகள் குழுவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹிணி அலஸ் தலைமையில் நடைபெறவுள்ளதோடு இறுதி நாள் நிகழ்வு விழா 17ம் திகதி மாலை மூன்று மணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தலைமையில் நடைபெறும்.

இம்முறை போட்டியின் பிரதான அனுசரணையாளர்களாக பியர்சன் எடெக்ஸல் நிறுவனமும், சிலோன் பிஸ்கட் நிறுவனமும் செயற்படுகின்றன.

போட்டியில் பங்குபெறும் சர்வதேச பாடசாலைகள் ஆசியான் சர்வதேசப் பாடசாலை, எலிதீயா சர்வதேசப் பாடசாலை, பீவர் சர்வதேசப் பாடசாலை, பிரித்தானிய சர்வதேச பாடசாலை கொழும்பு சர்வதேசப் பாடசாலை (கொழும்பு) கொழும்பு சர்வதேசப் பாடசாலை (கண்டி) எலிஸபெத் மோயர் சர்வதேசப் பாடசாலை, கேட்வே சர்வதேச படசாலை (கொழும்பு) கேட்வே சர்வதேச பாடசாலை (கண்டி) லீட்ஸ் சர்வதேசப் பாடசாலை, லைசியம் சர்வதேச பாடசாலை (நுகேகொடை) லைசியம் சர்வதேச பாடசாலை (வத்தளை) லைசியம் சர்வதேச பாடசாலை (பாணந்துறை) லைசியம் சர்வதேசப் பாடசாலை (இரத்தினபுரி) ஏ. கே. ஐ. சர்வதேசப் பாடசாலை, ஒவர்சீஸ் சர்வதேசப் பாடசாலை, ஜேன்ட் சர்வதேசப் பாடசாலை, ரோயல் இன்ஸ்டிடியூட் சர்வதேச, சாந்த நிகலஸ் சர்வதேச பாடசாலை, சீவலி சர்வதேச பாடசாலை.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை