இல்ல விளையாட்டுப் போட்டியில் 'கமர்' இல்லம் சம்பியன்

பாணந்துறை, அம்பலந்துவை இல்மா முஸ்லிம் வித்தியாலயத்தின் இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் 'கமர்' இல்லம் சம்பியனாக தெரிவாகியது.

கல்லூரி அதிபர் ரிஸ்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில்களுத்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. எம். இல்யாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நஜ்ம், சம்ஸ், கமர், ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே சகல போட்டிகளும் நடைபெற்றன.

கமர் இல்லம் - நீல நிறம் - 266 - புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும்,

சம்ஸ் இல்லம்- சிவப்பு நிறம் 234 - புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும்,

நஜ்ம் இல்லம் - பச்சை நிறம் - 203 - புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும்,

பெற்றுக்கொண்டது.

தேகப்பியாச, உடற் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள் சிறப்பாக தமது பணியை செய்து பலரதும் பாராட்டைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கு பயிற்சியளித்த அளுத்கமை ஆசிரியர் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த பயிற்சி ஆசிரியைகள் பாராட்டப்பட்டதுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சங்கத்தின் சார்பில் மாஹிர் ஹனிபா பரிசைக்கையளித்தார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் விஜித் பிரியந்த, பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம். எஸ். எம். சிராஜ், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் பாராளுமன்ற விவகார செயலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரி, ஜீலான் மத்திய கல்லூரியின் அதிபர் ஹலீம் மஜீத், ஆகியோருடன் ,அலவிய்யா முஸ்லிம் மகா வித்யாலய பிரதி அதிபர் எஸ்.எச். தாலிப், அஹதிய்யா அஸ்வர் உட்பட ஆசிரியர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.

மொறட்டுவை மத்திய விசேட நிருபர்

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை