ஐ.நா. மனித உரிமைகள் உயரதிகாரிகளுடன் அமைச்சர் சாகல ரத்னாயக்க சந்திப்பு

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணை, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முறை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் அதிகாரிகள் துறைமுகங்கள் , கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் கலந்துரையாடினர்.  

பிரதமர் அலுவலக பிரதானி என்ற வகையில் அமைச்சர் சாகல ரத்னாயக்க இக்கலந்துரையாடலில் பங்கேற்றார்.  

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் களநிலைச் செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடர்பான அத்தியட்சகர் Georgette Gagnon, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் சட்டம், சமத்துவம் மற்றும் இன வன்முறைக்கெதிரான அலுவலக பிரதானி Mona Rishmawi ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.  

இச்சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சிலெட், எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பிலும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்மொழியப்பட்ட பிரேரணை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பிலும் கலந்துரையாடினர்.  

ஐ.நா. பேரவை முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பில் நாட்டின் மூத்த அரசாங்க அதிகாரிகளின் கருத்துக்களையும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையக உயர் அதிகாரிகள் கேட்டறிந்து கொள்ளவுள்ளனர்.  

Fri, 02/15/2019 - 09:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை