தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்

உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகள் (2019) பயில்வதற்கான விண்ணப்பங்களை, உயர் தொழில்நுட்ப நிறுவகங்கள் கோரியுள்ளன.

2019ஆம் கல்வியாண்டிற்கான கற்கைநெறிகளுக்கே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

2018ஆம் ஆண்டும் அதற்கு முன்னரும் நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற்றோர் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளை பயில்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.மார்ச் முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கியல், ஆங்கிலம், கட்டிட சேவைகள், பொறியியல், தேசிய உணவு தொழில்நுட்பம், முகாமைத்துவம் உள்ளிட்ட 16வகையான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகள் முழுநேரமாகவும் பகுதிநேரமாகவும் கற்பிக்கப்படும்.கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, சம்மாந்துறை, திருகோணமலை, வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஊவா மாகாணத்தில் பதுளை, மேல் மாகாணத்தில் கொழும்பு, தெஹிவளை, கம்பஹா,

தென் மாகாணத்தில் காலி, தங்காலை மத்திய மாகாணத்தில் நாவலப்பிட்டி, கண்டி, வடமேல் மாகாணத்தில் குருநாகல், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை, வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப நிறுவகங்களில் இப்பாடநெறிகள் மும்மொழிகளிலும் கற்பிக்கப்படுமென உயர் தொழில்நுட்ப நிறுவக பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.  

சாய்ந்தமருது குறூப் நிருபர் 

Thu, 02/14/2019 - 09:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை