புதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்

ஜனாதிபதி தெரிவிப்பு

இந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம் உருவாக்கப்படும்.பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருக்கிறது. அவ்வாறான அரசை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது என்று ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (17) முற்பகல் கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

,இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம் உருவாக்கப்படும். அந்த அரசாங்கத்தை பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்கக் கூடாது என்று ஜனாதிபதி  தெரிவித்தார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியை அக்கட்சியின் தலைமைத்துவம் இயக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருப்பதை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அவ்வாறான அரசை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது என்றும் தெரிவித்தார்.

நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதுடன், நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கும் நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sun, 02/17/2019 - 18:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை