சன் பிளவர் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுகம்

சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக்கழகத்தின் 25 வருட பர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கழக அங்கத்தவர்களின் ஒன்றுகூடல், நடப்பு வருட உத்தியோஸ்தர்கள் தெரிவு மற்றும் கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடை அறிமுகம் போன்ற நிகழ்வுகள் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் கழக தலைவர் பொறியியலாளர் எம்.சி.கமால் நிஸாத் தலைமையில் இடம்பெற்றது.

அதிகளவிலான கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் துபாயில் தொழில் புரியும் கழக அபிமானி ஏ.எல்.எம்.பைஸர் அன்பளிப்பாக வழங்கியிருந்த கழகத்திற்கான சீருடையினை அவரது புதல்விகள் கழக நிர்வாகத்திடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், அம்பாறை மாவட்ட செயலக கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் எம்.பீ.எம்.ரஜாய், கழக செயலாளர் ஏ.எஸ்.அஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

( மாளிகைக்காடு குறூப் நிருபர்)

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை